முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களை வெளியேற்றி, தகுதியான ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல் - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 23, 2026

முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களை வெளியேற்றி, தகுதியான ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்



2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 14 ஆண்டுகளில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. உரிய தகுதி பெறாத மற்றும் தேர்ச்சி பெறாத சுமார் 5000 பேர் ஆசிரியர்களாக தற்போது வரை பணிபுரிந்து வருகின்றனர். இந்த நியமனங்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளது என்பதை உரிய ஆவணங்களுடன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் எங்கள் சங்கத்தின் சார்பாக வழக்கு தொடர்ந்தோம்.





வழக்கை விசாரித்த நீதியரசர் 19/12/2024 அன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை அதிகாரியை நேரில் சந்தித்து நடவடிக்கைகள் மேற்கொண்டு தீர்வு காண உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பிறகு எங்களது புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டு ஓராண்டுகளுக்கு மேலாக கிடப்பிலே கிடந்தது. தற்போது எங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு எங்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.




கடந்த காலங்களில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்த உரிய ஆவணங்களை மீண்டும் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வழங்கி உள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரியமும் ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல பிரிக்க முடியாததாகவே நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஏற்கனவே பாலிடெக்னிக் மற்றும் ஆசிரியர் நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த வழக்குகள் சிபிசிஐடி அலுவலகத்தில் 8 ஆண்டுகளாக உறங்கி கொண்டுள்ளது. மேலும் பெரியார் நூலகத்தில் நூல்களை கொள்முதல் செய்த முறைகேடுகளில் ஈடுபட்டவர் திருமதி ஜெயந்தி IAS அவர்கள்தான் என்று தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த வாரம் தெரிவித்துள்ளது. இதே அதிகாரிதான் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராகவும் இருந்து வருபவர் என்பதையும் நினைவு கூர்கிறோம். இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியமும் பள்ளிக்கல்வித்துறையும் செய்த முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் அனைத்தையுமே தேர்வர்களே வெளிகொணர்ந்து வந்துள்ளோம். எங்கள் வாழ்வாதாரத்தை சீரழித்த இந்த முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களை வெளியேற்றி, தகுதியான எங்களை வைத்து ஆசிரியர் நியமனம் மேற்கொண்டு ஊழலற்ற ஆட்சியை நடத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages